ஆபத்தான குழிகளை உடனடியாக மூடுக! நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை!

Photo of author

By Parthipan K

நீலகிரியில் e-toiletக்காக வெட்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட கோரி பொதுமக்கள் சார்பில் நகராட்சி அலுவகத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதிகளில் கிட்டத்தட்ட 1,500 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பாக கடையோரப் பகுதிகளுக்கு முன்பு அருகில் உள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதாலும், கடைகள் அதிக அளவில் இருப்பதாலும் மார்க்கெட்டை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் நகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது.

அதன்படி, அதே பகுதியில் இருக்கக்கூடிய விநாயகர் கோவிலுக்கு கீழ்புறம் இருக்கக் கூடிய வணிக வளாகம் ஒன்றில் 33 கடைகள்  நகராட்சியால் அமைக்கப்பட்டன. அந்த வணிக வளாகத்தின் அருகே இருந்த நடைபாதையை  பொதுமக்களும் வியாபாரிகளும் தங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த வணிக வளாகத்தின் அருகே e-tolilet  கட்ட வேண்டும் என்று புதிய திட்டத்தை மாநகராட்சி அறிமுகப்படுத்தியதுடன்,  அதற்காக மூன்று குழிகள் தோண்டப்பட்டன.

ஆனால் தோண்டப்பட்ட குழியுடன்  அப்படியே விட்டு சென்ற அதிகாரிகள் E  டாய்லெட் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு குழியும்  மிக ஆழமாக இருப்பதால், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் தவறி கீழே விழுந்தால் பலத்த காயம் அடைவார்கள்  என்று எச்சரிக்கப்பட்டது.

அந்த வகையில், அதே பகுதியில் கடை வைத்து நடத்தும் அதிகாரி ஒருவரும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்லும் வழியில் நடை பாதையில் இருந்து தவறி விழுந்து விட்டார். இதில், அதிர்ஷ்டவசமாக காயம் ஏதும் ஏற்படவில்லை. எனவே மிகவும் ஆபத்தான இந்த குழியை  மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.