கடந்த ஆட்சியில் பத்திரப் பதிவுத் துறையில் நடைபெற்ற பித்தலாட்டம்! புதிய குண்டை போட்ட அமைச்சர்!

0
131

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரி செலுத்துவது எளிமையாக்கப்படும் என்றும் தமிழ்நாட்டில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு உள்ளிட்டவற்றில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார்.

தமிழ்நாட்டில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கூறியிருக்கின்றார். மதுரையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த அமைச்சர் மூர்த்தி பத்திரப் பதிவுத் துறையில் கோயமுத்தூர் மாவட்டத்தில் 10 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மானிய கோரிக்கையில் பல அதிரடி நடவடிக்கைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும். சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் பதிவுத்துறையில் ஆள்மாறாட்டம், போலி பத்திரம் தயாரிப்பு உள்ளிட்ட முறைகேடுகளை கண்டுபிடித்து இருக்கின்றோம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பத்திரப் பதிவுத் துறையில் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெற்று இருக்கின்றன என்று கூறியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.

வரிஏய்ப்பு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் ,வரி செலுத்துவது மிகவும் எளிமையாக்கபடும் தமிழ்நாட்டில் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். வணிகத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் மூர்த்தி கூறியிருக்கிறார்.

Previous articleபன்னீர்செல்வம் உட்பட அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அதிரடியாக கைது! வேலையை காட்டிய முதலமைச்சர்!
Next articleகாதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் நடு ரோட்டில் கொலை செய்த கொடூரன்! அதுவும் கழுத்தை அறுத்து வெறித்தனம்!