திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் திடீரென்று வெளியிட்ட அறிவிப்பு! பரபரப்பான அண்ணா அறிவாலயம்!

Photo of author

By Sakthi

திமுகவின் உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி ஆரம்பிக்கிறது என்று அந்தக் கட்சியின் தலைமை கழகம் தெரிவித்திருக்கின்றது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கின்றது இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக தே இந்த உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் மாநிலத்தில் இருபெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகள் அதோடு இடதுசாரிகளும் மற்ற கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல வாக்காளர் வரைவு பட்டியல் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்களின் ஆணைப்படி இன்று அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளால் மாவட்டம் தோறும் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் எதிர்வரும் 23 ஆம் தேதி அன்பே திமுகவின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறும் என்று அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களால் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வரும் திங்களன்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் துரைமுருகன்.

அதோடு இந்தக் கூட்டத்தின் நோக்கமானது கழகத்தின் ஆக்கப்பணிகள் சம்பந்தமானது என்று அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.