4 வீரர்களுடன் விண்ணில் பாய்ந்த க்ரூ டிராகன் விண்கலம் – நாசா தகவல்!

0
89

அமெரிக்க  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்-நாசா,  ரஷ்யாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு வீரர்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வீரர்கள் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

இன்று, இந்திய நேரப்படி அதிகாலை 5:57 மணி அளவில் நாசா மற்றும் ஜப்பானை சேர்ந்த 4 வீரர்கள் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு நபர்களை அனுப்பும் திட்டத்தின் கீழ், க்ரூ  டிராகன் என்றழைக்கப்படும் பால்கன் 9 ரகத்தை சேர்ந்த ராக்கெட்டுகளை தயாரித்துள்ளது. 

இந்த முழுமையான விண்வெளிப் பயணத்தை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவது நாசாவிற்கு இதுவே முதல் முறை ஆகும். விண்வெளியில் பாய்ந்த பால்கன் ராக்கெட்டில் இருந்து க்ரூ டிராகன் விண்கலம் சரியான நேரத்தில் பிரிந்து, தற்போது தனது இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. 

அடுத்த 27 மணி நேர பயணத்தை தொடர்ந்து, இந்த க்ரூ டிராகன் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்ட வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வீரர்கள் ஆறு மாத காலத்திற்கு அங்கிருக்கும் பணிகளை மேற்கொள்வார்கள். மேலும் அமெரிக்காவில் அனுப்பிவைக்கப்பட்ட ராக்கெட்டுகளில், இதுவே அளவில் பெரியது ஆகும்.

இன்று ஏவப்பட்ட ராக்கெட்டை அமெரிக்க துணை அதிபர் மைக்-பென்ஸ் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது கூறிய அவர் கூறியதாவது, “அமெரிக்க விண்வெளி வீரர்கள் ரஷ்ய சோயுஸ் ராக்கெட்டுகளில் பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அதேபோல் ரஷ்யாவை சேர்ந்த வீரர்களும் அமெரிக்க வணிக வாகனங்களில் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறு பயணிப்பதால் ரஷ்யாவிற்கு எந்த ஒரு இழப்பீடும் ஏற்படாது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்”.

author avatar
Parthipan K