மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை!

0
277
Important announcement issued by the central government! 60 days special maternity leave for women employees!
Important announcement issued by the central government! 60 days special maternity leave for women employees!

மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் 60 நாட்கள் சிறப்பு விடுமுறை!

இந்தியாவில் மத்திய மற்றும் தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு உதவி சட்டத்தின் கீழ் பிரசவ காலத்தில் ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.தொடக்கத்தில் ஒன்பது மாத காலம் மட்டுமே வழங்கப்படும் இந்த விடுமுறை தாய்மார்களின் உடல் நிலையை கருதில் கொண்டு  ஒரு வருடமாக நீட்டிக்கபட்டுள்ளது.

மேலும் தற்காலிக பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அனைத்து ஊழியர்களுக்கு எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் ஒரே மாதிரியான மகப்பேறு விடுமுறை தான் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பிரசவ காலத்தில் ஏதேனும் தவறுதலாக குழந்தை இறந்து விட்டாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் அவர்களுக்கு கூடுதலாக 60 நாட்கள் சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பிரசவமானதிலிருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டும் இந்த சிறப்பு விடுப்பு பெற தகுதி உடையவர்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு!
Next articleபல்கலைகழகம் வெளியிட்ட அசத்தல் திட்டம்! மாணவிகளுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுமுறை!