மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு இது இனி கட்டாயம்!!
வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இனிமேல் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது.
சீனாவில் தோன்றி கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் உலக மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்ட ஒரு விஷயம் தான் கொரோனா. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு நிறைய உயிர் இழப்பினையும் மக்கள் சந்தித்தனர். தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஒரளவிற்கு கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இன்னும் பழைய இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்ப முடியாத சூழல் உள்ளது.
இவ்வாறு உலக மக்களின் வாழ்க்கையை மாற்றிய கொரோனா மீண்டும் அதன் தாயகமான சீனாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒமிக்ரானின் துணை வைரஸ் BF.7 என மாறுபாடு அடைந்துள்ள இந்த வைரஸ் மிகவும் அதிவேகமாக பரவி வருவதாக தெரிய வந்த நிலையில் ஜப்பான், அமெரிக்கா, பிரேசில், தென் கொரியா,இங்கிலாந்து மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வைரஸ் நுழைந்துவிட்டது. கடுமையாக சுவாச குழலை பாதிக்கும் இந்த வைரஸ் தடுப்பூசிக்கும் கட்டுப்படாத தன்மையை கொண்டுள்ளது.
அண்டை நாடான இந்தியாவில் இது பரவி விடும் என மக்கள் அச்சம் அடைந்த நிலையில் மத்திய சுகாதார செயலாளர் முன் முன்னேற்பாடான பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் மத்திய சுகாதார மந்திரி மான்சுக் மாண்டாவியா தலைமையில் நேற்று சர்வதேச இந்திய கொரோனா நிலைமை குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் BF.7 வைரஸ் இந்தியாவில் பரவி விடக்கூடாது என முன் எச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் எதிரொலியாக சீனா உள்ளிட்ட அண்டை நாடுகள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை (ரேண்டம் ) நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.