பள்ளிகல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மாணவர்களுக்கு இந்த படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும்!
கொரோனா காலகட்டத்தில் பள்ளிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.மேலும் கடந்த தீபாவளி பண்டிகை முதல் தற்போது நடந்து முடிந்த பொங்கல் பண்டிகை வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தான் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் வரும் மார்ச் மாதம் பத்து மற்றும் பிளஸ் ஒன் ,பிளஸ் டூ வகுப்புகளுக்கு பொது தேர்வு நடைபெற உள்ளது.அதனால் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்படும்.
பிப்ரவரி 13 முதல் 17 ஆம் தேதி வரையிலும் மல்லி எனும் தமிழ் மொழி திரைப்படம் ஒளிபரப்ப வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த படத்தை ஒளிபரப்ப இணைப்பு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.இந்த படத்தை மட்டுமே தவிர வேறு படத்தை இயக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன் படத்தை பார்க்க வேண்டும்.அது மட்டுமல்லாமல் கதையின் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தில் அடிப்படை பின்னணியை கூற வேண்டும்.இது தொடர்பான வழிமுறைகளைப் பின்பற்றி படத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.