டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! தேர்வர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி தமிழக அரசில் காலியாக உள்ள பல்வேறு துறைகளின் பணியிடங்களை நிரப்பி வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023 -ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை வெளியிட்டனர்.
அதில் 1754 பணியிடங்களை நிரப்புவதற்க்கான தகவல் மட்டும் இடம் பெற்று இருந்தன. மேலும் குரூப்1 மற்றும் குரூப் 4 தேர்வுக்கு பணியிடங்களின் எண்ணிக்கை வெளியாகவில்லை. சர்ச்சைக்குண்டான இந்த திட்ட அறிக்கை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலிருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலிப்பணியிடங்களுக்கு மதிப்பீடுகளின் அடிப்படையில் போட்டித் தேர்வுகளுக்கான அட்டவனையை வெளியிட்டு வருகின்றது.தற்போது ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படுவது முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவனை தான் வெளியிடப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
அதில் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள 731 இடங்களுடன் சேர்த்து கூடுதலாக 2500 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 2500 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையங்களில் மேலும் இந்த எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூலை மாதம் நடந்த குரூப் 4 தேர்வுக்கு ஜனவரி மாதத்தில் ரிசல்ட் வெளியாக உள்ள நிலையில் தற்போது 9870 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.