இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

Photo of author

By Amutha

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

Amutha

இதோ வந்துவிட்டது  டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு! இன்று குரூப் – 4 தேர்வு முடிவுகள் வெளியீடு! 

கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.), தட்டச்சர்,  இளநிலை உதவியாளர்,  உள்பட  குரூப்-4 பதவிகளில் வரும் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது.

தமிழக அரசின் பல்வேறு துறைகள், வாரியங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர் ஆகிய பதவிகளில் 7,138 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த 24.7.2022 அன்று ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்காக பயனாளர்கள் காத்திருந்தனர். தேர்வு முடிவுகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் தொடர்ந்து முடிவுகள் வெளியியாவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்ற மாதமே தேர்வு முடிவுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளி வராததால் பயனாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சமூக வலைத்தளங்களில் தேர்வு முடிவை வெளியிடக்கோரி பல்வேறு கோரிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தேர்வு முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதன் படி இன்று மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதனால் தேர்வு எழுதிய தேர்வாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி-  யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை பெறலாம். தேர்வு முடிவுகளை https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK என்ற இணையதள முகவரியில்  சென்று தெரிந்து கொள்ளலாம்.