தனி தனி மீட்டிங்.. விஜய்யின் அடுத்தக்கட்ட மூவ்!! தவெக லிருந்து வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு!!

Photo of author

By Rupa

TVK:  தவெக மாவட்ட செயலாளர்களை விஜய் தனித்தனியே சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

விஜய்யின் அரசியல் உத்வேகமானது முன்பை காட்டிலும் தற்பொழுது அதிகரித்துள்ளது. வரப்போகும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு வியூகங்களை அமைத்து வருகிறார். அந்த வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடியவர்களை நேரடியாக சந்தித்தார். இவரின் சந்திப்பிற்கு காவல்துறை பல விதிமுறைகளை விதித்து முட்டுகட்டை போட்டது. இதுகுறித்தும் விஜய் பரந்தூரில் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.

மேற்கொண்டு திமுகவும் அடுத்த நாளே பரந்தூர் விமான நிலையம் அமைத்தால் மக்களுக்கு பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும் என்ற அறிக்கை ஒன்று வெளியிட்டனர். இது விஜய்யின் ஆதரவு குரலின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் சூழலில் இன்று விஜய் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களையும் தனித்தனியே சந்திக்க உள்ளார்.

இரு மாவட்டங்களுக்கு ஒரு செயலாளர் என்ற பாணியில் அமைப்பதாக முன்னதாகவே கூறிய நிலையில் இன்று இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் வருவதற்கு ஒன்றரை ஆண்டு காலம் மட்டுமே இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளது.

அதாவது யாருடன் கூட்டணி வைப்பார், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள போகும் பார்ட்டி எது என்று அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் நோக்கி வைக்கின்றனர்.