செய்முறை தேர்வு குறித்து வெளிவந்த முக்கிய தகவல்! அரியர் மாணவர்களும் எக்ஸாம் எழுதலாம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஆண்டு தான் குறைந்தது. அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பண்டிகை மற்றும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு அதிகளவு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் நடப்பு கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் முடிக்காமல் ஆசிரியர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொது தேர்வு வரும் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது தேர்விற்கு முன்பாக இம்மாதம் இறுதியில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வருடம் 11 ஆம் வகுப்பு படித்த செய்முறை தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் தற்போது நடக்கவிருக்கும் செய்முறை தேர்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு எழுதாமல் தற்போது 12 ஆம் வகுப்பு பயிலும் அரியர் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வானது மார்ச் ஒன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 11 ஆம் வகுப்பு செய்முறை தேர்வு பட்டியல்களை dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.