வாட்ஸ் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்
வாட்ஸ் ஆப் என்பது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அவசியமானதாக மாறிவிட்டது அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப அவ்வப்போது புதிய புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது ஆனால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் அனைவரும் அந்த புதிய அம்சங்களை அறிந்து இருக்கிறோம் என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்வேன் இன்னிலையில் வாட்ஸ் அப்பில் நாம் அறியாத வகையில் மறைந்துள்ள புதிய அம்சங்களை பற்றி பார்ப்போம்.
வாட்ஸ் அப்:
மொபைல் போன் வந்த காலத்தில் அனைவரும் SMS என்ற குறுஞ்செய்தியை தான் பயன்படுத்தி வந்தனர்.இதில் நாம் அனுப்ப வேண்டிய தகவலை புரியும் வகையில் சிறியதாக ஒரு குறிப்பிட்ட வார்த்தைகளில் எழுத வேண்டியிருந்தது.மேலும் இந்த SMS சேவைக்கு நெட்வொர்க் நிறுவனங்கள் கட்டணங்களையும் வசூலித்து வந்தன.
இந்நிலையில் தான் ஸ்மார்ட் போன் அறிமுகமானது.ஸ்மார்ட் போன் அறிமுகத்தால் அதில் பயன்படுத்தும் வகையில் பல்வேறு மொபைல் ஆப்கள் வெளியாகி வந்தன.அந்த வகையில் பொது மக்கள் ஒருவருக்கொருவர் இலவசமாக மொபைல் மூலம் சேட் செய்யும் வகையில் வாட்ஸ் ஆப் செயலி அறிமுகம் செய்யப்பட்டது.இதனையடுத்து உலக அளவில் மக்கள் மத்தியில் வாட்ஸ் ஆப் இன்றியமையா இடத்தை பெற்று வருகிறது. குறிப்பாக மக்கள் அனைவரும் இந்த செயலியில் அதிக நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
இவ்வாறு பல வருடங்கள் அல்லது பல மணி நேரமாக இந்த வாட்ஸ் அப் செயலியை மக்கள் பயன்படுத்தி இருந்தாலும் இன்னும் அவர்களுக்கே தெரியாத வகையில் சில அம்சங்கள் வாட்ஸ் அப்பில் மறைந்து இருக்கிறது. தற்போது அது என்னென்ன அம்சங்கள் என்பதற்கான முழு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த அம்சங்கள் அனைத்தும் ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
வாட்ஸ் ஆப் பற்றிய அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்:
ஒரு வார்தையின் தொடக்கம் மற்றும் முடிவில் * * இந்த குறியீட்டை பயன்படுத்தினால் வார்த்தை போல்டாக மாறிவிடும்.
அதேபோல் வார்த்தைக்கு முன் மற்றும் பின்பக்கத்தில் _ _ இந்த குறியீட்டை பயன்படுத்தினால் வார்த்தை இத்தாலிக் ஃபாண்டாக மாறிவிடும்.
மேலும் வாட்ஸ் அப்பில் நமக்கு வரும் போட்டோ, வீடியோ ஆகியவை தானாக பதிவிறக்கம் ஆகி போனில் இடத்தை அடைத்து வருகிறது. தற்போது இதனை தடுக்க Settings-Chats-Save to camera roll என்னும் ஆப்ஷனை ஆஃப் செய்து வைத்தால் இப்படி தானாக பதிவிறக்கம் ஆகாது.
இதையடுத்து நீங்கள் மொபைலில் மற்ற ஆப்களை பயன்படுத்தும் போது வாட்ஸ் ஆப் ஆப்பிலிருந்து தொடர்ந்து உங்களுக்கு நோட்டிபிகேஷன் வந்து இடையூறு செய்து கொண்டிருக்கும், அதை நிறுத்த Settings-Accounts-privacy-Enable fingerprint lock-show content in notification-Disable செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் இது போன்ற தேவையில்லாத நோட்டிபிகேஷன் தொந்தரவு இருக்காது.
மேலும் குறிப்பிட்ட சில நபர்களின் மெசேஜ் மட்டும் பார்க்க வேண்டும் என்றால் அவர்களுடன் Profile க்கு சென்று அவரது பெயரை கிளிக் செய்து அதில் உள்ள custom notification-select-popup என்னும் ஆப்ஷனுக்கு சென்று Always Show Popup என்று மாற்றினால் அவர்களின் மெசேஜ் உங்களுக்கு வரும்.அவ்வாறு செய்தால் குறிப்பிட்ட நபர்களின் மெசேஜ் மட்டும் பாப் அப் ஆகும்.
அடுத்ததாக உள்ள பிரச்சனை நம் அனுமதியின்றி பலர் நம்மை பல்வேறு தேவையில்லாத குழுக்களில் சேர்த்து விடுவார்கள். இதை நிறுத்த வேண்டும் என்றால் Settings-Account-Privacy-Group என ஆப்ஷனுக்கு சென்று அதில் மூன்றாவதாக உள்ள My Contacts Except என்னும் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் அனுமதியின்றி வேறு குழுவில் இணைக்க முடியாது.
அடுத்ததாக பெரும்பாலான பயனர்கள் பிறருக்கு வாய்ஸ் மெசேஜ் செய்யும் போது அதை சரி பார்க்காமலே அனுப்பி விடுவர். சரி பார்க்க வேண்டுமென்றால் வாய்ஸ் மெசேஜ் பதிவு செய்யும் போது மைக் ஆப்ஷனுக்கு மேல் உள்ள லாக் ஆப்ஷனை நோக்கி இழுத்து விட வேண்டும். இவ்வாறு செய்தால் நீங்க பதிவு செய்த வாய்ஸ் மெசேஜ் தானாக பிறருக்கு செல்லாது. நீங்கள் அதை சரி பார்த்து கொண்டு பின்பு அனுப்பலாம்.