லிவ் இன் உறவில் வாழும் தம்பதிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! சட்டரீதியாக கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்?
தற்போது வளர்ந்து வரும் காலகட்டத்தில்லிவ் இன் கலாச்சாரம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவுகளை பதிவு செய்வதற்காக விதிகள் மற்றும் வழிகாட்டுதலை உருவாக்க வேண்டும் என கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது இந்தியாவில் சட்டப்படி குற்றம் அல்ல. இருப்பினும் அதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் சட்டங்களும் இதுவும் கிடையாது. திருமணமாகாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இதுவரை உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளது. அதனால் சட்டபூர்வமான வழிமுறை மற்றும் பதிவு முறை தேவை என கோர பட்டிருந்தது.
பதிவு முறை இல்லாமல் லிவ் இன் உறவுகளில் எழும் குற்றங்களை தடுக்கவும் பொய்யான பாலியல் பலாத்கார வழக்குகளை பதிவு செய்வதை தடுக்கவும் இந்த வழிமுறை உதவும். தற்போது அவர்களது உறவு தொடர்பான ஆதாரங்களை கண்டறிவது நீதிமன்றங்களுக்கு கடினமாக உள்ளது.
திருமணமாகாமல் சேர்ந்து வாழ்கிறவர்கள் தங்கள் உறவை பதிவு செய்கிறது போது அது முக்கிய ஆதாரமாக மாறிவிடும். அதனைத் தொடர்ந்து லிவ் இன் உறவை பதிவு செய்வதன் மூலமாக நீதிமன்றத்திற்கு மட்டுமல்லாமல் லிவ் இன் பார்ட்னர்கள் இருவருக்கும் சேர்ந்து வாழ ஒரு ஆதாரம் கிடைக்கும்.
திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதை பதிவு செய்யாமல் இருப்பது அரசியல் சாசன பிரிவு 19 மற்றும் 21 மீறுவதாகும். அதனால் மத்திய அரசு இது குறித்து ஒழுங்குமுறை மற்றும் பதிவு செய்யும் நடைமுறையை உருவாக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.