வாகன ஓட்டிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இலவச கண் பரிசோதனை!
கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வாகன ஓட்டிகளுக்கு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தது.இந்த நடைமுறை அமலுக்கு வந்ததிற்கு காரணம் பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம்செய்கின்றனர்.உயிரையும் பொருட்படுத்தாமல் பேருந்தின் மேற்கூரையின் மீது ஏறி நடனமாடியும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதனால் இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என அறிவிக்கப்பட்டது.
மேலும் தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ்,தீயணைப்பு வாகனத்திற்கு வழிவிட தவறினால் ரூ 10000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதுமட்டுமின்றி தேவையின்றி ஒலிப்பானை இயக்கி சத்தமெழுப்பினால் ரூ 1000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஜனவரி 11 முதல் 17 ஆம் தேதி வரை தேசிய சாலை பாதுகாப்பு வாரமாக அறிவித்துள்ளது.தேசிய சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி சென்னை சங்கர நேத்ராலயா மருத்துவமனை சார்பில் வாகன ஓட்டிகளுக்கான இலவச கண் பரிசோதனை ஜனவரி 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்த பரிசோதனை நுங்கம்பாக்கம்,கல்லூரி சாலையில் உள்ள சங்கர நேத்ராலயாவின் தலைமை வளாகத்தில் கண் பரிசோதனை செய்யபடுகின்றது.
கார்ல் ஜெய்ஸ் விஷன் கேர் நிறுவனத்துடன் இணைந்து இந்த கண்பரிசோதனை செய்யபடுகின்றது.மேலும் இந்த முகாமின் மூலம் பார்வைத் திறன் பரிசோதனை, நிறமறிதல் பரிசோதனை,காட்சி புலங்கள்,கண் அழுத்த அளவீடு,விழித்திரை,கண் நரம்பு பரிசோதனை போன்றவை அடங்கும்.வாகன ஓட்டிகள் சென்று இலவசமாக கண் பரிசோதனை செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பரிசோதனையில் யாரேனுக்கும் உயர் சிகிச்சை தேவைபட்டால் தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கபடுவார்கள்.