யூடியூப் பிரபலங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இவ்வாறு நீங்கள் செய்தால் ரூ 50 லட்சம் அபராதம்!
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்துமே ஒரு செல்போனுக்குள் அடங்கி விடுகின்றது.இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பயன்படுத்தி வருகின்றனர்.ஒரு ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும் உலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் உடனுடக்குடன் நமக்கு தெரிய வரும் அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.
கொரோனா பெருந்தொற்றின் போது பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகளே ஆன்லைன் மூலமாகத்தான் நடைபெற்றது.செல்போன் என்ற ஒரு பொருள் ரேடியோ, டிவி, அலாரம், கணினி, விளையாட்டு களம் என எண்ணற்ற பலன்களை நமக்கு தருகின்றது.சமூக வலைத்தளங்கள் மூலம் எண்ணற்ற செயலி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்கள் என்றால் அவை குறைவு தான்.
மேலும் மத்திய அரசு தற்போது புதிய விதிகளை அறிமுகம் படுத்தியுள்ளது.அந்த விதிகளின் மூலமாக சமூக வலைத்தளங்களில் நுகர்வோரின் நலனை பாதுகாக்கவும் தவறான வழிகாட்டும் வகையிலான விளம்பரங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளது.முறையற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான வழிநடத்த கூடிய விளம்பரங்கள் ஆகியவற்றில் இருந்து பயனாளிகளை பாதுகாக்கும் வாகையில் அமைந்துள்ளது.
இந்த விதிகளை மீறி செயல்பட்டால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 ன் கீழ் தண்டனை அளிக்கப்படும்.இந்த விதிகளின் படி தயாரிப்பாளர்கள்,விளம்பரதாரர் மற்றும் அவற்றை ஊக்குவிப்போருக்கு ரூ 10 லட்சம் வரை மத்திய நுகர்வோர் பாதுக்காப்பு கழகம் சார்பில் அபராதம் வசூல் செய்யப்படும்.இந்த குற்றங்கள் மீண்டும் மீண்டும் செய்து வந்தால் ரூ 50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சமூக வலைதள பிரபலங்கள் ஏதேனும் சேவைகள் அல்லது திட்டங்கள் பொருட்களை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடும்போது அது தொடர்பாக அனைத்து விவரங்களையும் பதிவு செய்வது கட்டாயம் என அறிவித்துள்ளனர்.மேலும் விளம்பரங்களில் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் தெளிவான மொழியில் இடம்பெற வேண்டும்.லைவ் நிகழ்ச்சிகளிலும் இந்த நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.மீறி மின்பற்ற தவறினால் அந்த விளம்பரங்கள்,செய்திகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.