மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது!
மத்திய அரசு கடந்த ஆண்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டது.அந்த நடவடிக்கையானது தேர்தலில் நேர்மையான வாக்குப்பதிவு நடக்கவேண்டும் அவ்வாறு நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக தேர்தல் சட்டங்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக சிறப்பு திட்டம் ஒன்றை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் கமிஷன் நடத்தி வருகின்றது.இந்நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் இருக்கும் உறுப்பினர்கள் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்பினார்கள்.அதற்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரஜிஜீ நேற்று பதிலளித்துள்ளார்.
அவர் கூறுகையில் முன்னதாகவே வைத்துள்ள வாக்காளர் மற்றும் புதிய வாக்காளரிடம் ஆதார் எண்ணை விருப்பத்தின் அடிப்படையில் பெற்று பதிவு செய்ய வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு தேர்தல் சட்டங்கள் மேலும் திருத்தம் சட்டம் 2021 அனுமதி வழங்கியுள்ளது.வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது அவரவர்களின் விருப்பம்.
இந்நிலையில் அண்மையில் படிவம் 6பி-ல் என்ற படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.அந்தவகையில் அங்கீகாரத்திற்கான வாக்காளர்களிடம் இருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.ஆதார் விவரங்கள் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதலை திரும்ப பெறுவதற்கு எந்த ஒரு வசதியும் கிடையாது.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் சேர்ப்பது அவரவர்களின் சொந்த விருப்பம் தான் இதில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.ஆகையால் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் முன்னதாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு தான் கிரண் ரிஜிஜீ நாடு முழுவதும் உள்ள 95 கோடி வாக்காளர்களின் 54 கோடிக்கு அதிகமானவர்கள் அவரவர்களின் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.