ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில்  வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்!

Photo of author

By Parthipan K

ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேதியில்  வாடிக்கையாளர் சேவை வழங்கப்படும்!

இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அனைத்து வங்கிகளும் இம்மாதம் 31ஆம் தேதி வங்கி நேரப்படி திறந்திருக்க  வேண்டும். அந்நாளில் வாடிக்கையாளர்கள் சேவைகளையும் தடையின்றி கொடுக்க வேண்டும். குறிப்பாக வங்கிகளில்  கவுண்டர் பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு என்இஎஸ்டி, ஆர்டிஜிஎஸ் போன்ற ஆன்லைன் பரிவர்த்தனை  சேவைகள் வழக்கம் போல் இரவு 12 மணி வரை செயல்பட வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு 2022- 23 மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைகிறது. அதனால் அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர் சேவைகளுக்கு மூடப்பட்டிருக்கும். வங்கிகள் திறந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் சேவை வழங்கப்படாது.

ஆனால் இந்த நிதியாண்டில் மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் வாடிக்கையாளர் சேவைகளை வழங்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று குடிபத்வா, யுகாதி பண்டிகை, பீகார் திவாஸ், தெலுங்கு புத்தாண்டு தினம் என அந்தந்த மாநிலங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து மார்ச் 25 நான்காவது சனிக்கிழமை வங்கி விடுமுறை, மார்ச் 26 ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை. மார்ச் 30 ஸ்ரீ ராம நவமி கொண்டாடும் மாநிலங்களில் வங்கி விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அந்தந்த மாதங்களின் பண்டிகைகளுக்கு ஏற்ப வங்கிகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.