தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இனி மதுரை வழியாகவே இயக்கப்படும்!

Photo of author

By Parthipan K

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இனி மதுரை வழியாகவே இயக்கப்படும்!

கடந்த கொரோனா பெருந்தொற்றின் பொழுது போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையிலும் மக்கள் அதிக கூட்ட நெரிசல் இருக்கும் இடங்களில் செல்வதற்கும் பேருந்து மற்றும் ரயில்களில் பயணம் செய்வதற்கும் அச்சமடைந்து வந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு பரவல் முற்றிலும் அதனால் ரயில் மற்றும் பேருந்துக்களில் பயணம் செய்ய படிப்படியாக மக்கள் தொடங்கினார்கள். மேலும் பேருந்தை  விட பெரும்பாலானோர் ரயில் பயணத்தை விரும்பினார்கள். அதனால் வாராந்திர சிறப்பு ரயில் போன்றவற்றை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது.

பண்டிகை நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு கட்டண ரயில் மற்றும் சிறப்பு ரயில் கூடுதலாக இயக்கப்பட்டு வருகின்றது. கடந்த ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் கூடுதலாகவே தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ரயில் பாதைகள் சீரற்று இருக்கின்றது.

அதனால் ஆங்காங்கே தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. அதனால் ஒரு சில பகுதிகளுக்கு ரயில் பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு அல்லது மாற்று பாதையில் இயக்கப்பட்டு  வருகின்றது. அந்த வகையில் தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் மதுரை திருமங்கலம் இடையேயான இரட்டை அகலப்பாதை தண்டவாள இணைப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

அதனால் மதுரை வழியாக செல்லும் மற்றும் மதுரையில் இருந்து புறப்படும் தென் மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டிருந்தன. சுமார் ஒரு மாதம் நடந்து வந்த இந்த பணியாள் தென் மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இந்நிலையில்  தண்டவாளங்கள் இணைப்பு பணிகள் நேற்றுடன் முடிவடைந்தன. அதனால் இன்று முதல் தென்மாவட்ட ரயில்கள், ரத்து செய்யப்பட்ட ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல மதுரை ரயில் நிலையம் வழியாகவே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.