தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! திருவனந்தபுரம் பகுதி ரயில் இந்த தேதியில் ரத்து!
இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. மேலும் பேருந்து போன்ற கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் இடத்தில் பயணம் செய்வதற்கு மக்கள் அச்சமடைந்து வந்தனர்.
பெரும்பாலானூர் ரயில் பயணத்தை விரும்பினார்கள். அதனால் ரயில்களின் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் அதிகரித்தது. அதனால் தெற்கு ரயில்வே பயணிகளுக்கு பல்வேறு வகையான வசதிகளை செய்து கொடுத்தது. அதனைத் தொடர்ந்து வாராந்திர சிறப்பு ரயில் என ஒவ்வொரு பகுதிகளுக்கும் இயக்கப்பட்டது. குறிப்பாக கடந்த தீபாவளி மற்றும் பொங்கல் திருநாள் என பண்டிகை நாட்களில் அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து கேரளத்தின் திருவனந்தபுரத்துக்கு நாள் ஒன்றுக்கு இரவு 7 45 மணிக்கு விரைவு ரயில் வண்டி எண் 12623 இயக்கப்படுகிறது. அந்த ரயில் வரும் மார்ச் 25ஆம் தேதி திருச்சூர் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறு மார்க்கமாக திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு தினமும் மாலை 3 மணிக்கு விரைவு ரயில் வண்டி எண் 12624 இயக்கப்படுகின்றது. இந்த ரயில் மார்ச் 26 ஆம் தேதி திருச்சூரில் இருந்து இரவு 8.43மணிக்கு புறப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் சென்னைக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.