கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!

0
234
Important information released by the Department of Education! There is no entrance exam for them!
Important information released by the Department of Education! There is no entrance exam for them!

கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்! இவர்களுக்கு நுழைவுத் தேர்வு இல்லை!

கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவிப்பு என்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படை மதிப்பீடு தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன் நுழைவு தேர்வு போன்ற திட்டமாக இருப்பதாக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுபற்றி பள்ளி கல்வித்துறை நேற்று விளக்கமளித்திருந்தது. அதில் பள்ளி கல்வித்துறை கூறியதாவது அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் ஆர்வமும் திறமையும் கொண்ட மாணவர்களை தொடர்ச்சியாக பயிற்றுவிக்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யவும் அந்த மாணவர்கள் விருப்பப்படும் உயர் கல்வி நிறுவனங்களை சென்றடையும் வரை நீடித்து தொடர் கவனிப்போம் வழிகாட்டுதலும் வழங்கவும் மாணவர்களுக்கு அடிப்படை மதிப்பீடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த செய்தி மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்த இருப்பதாக தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு நுழைவுத் தேர்வு குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக முன்னதாகவே தெளிவுபடுத்தி உள்ளது. அந்த நிலைப்பாட்டில் தற்போது எவ்வித மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள செம்மை பள்ளிகள், மாதிரி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களும் அவர்தம் விருப்பத்திற்கும், திறமைக்கும் ஏற்ப உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்பினை பள்ளி கல்வித்துறை தொடர்ந்து வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleபெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!
Next articleவிமான நிலையத்தில் அமலாகும் புதிய வசதி! பயணிகள் இருந்த இடத்திலிருந்து வீடியோ மூலம் உடைமைகளை அடையாளம் காணலாம்!