மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்! ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வெளியீடு!
மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அந்த அறிவிப்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவிற்கு மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சார்பில் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருவது வழக்கம் தான்.அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
முன்பதிவு தொடங்கிய நிலையில் அரசு பேருந்துகளில் முன்பதிவு நிறைந்து வருகின்றது.ஆனால் ஆம்னி பேருந்துக்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதனால் ஆம்னி பேருந்துகளில் இருக்கைகள் நிறையவில்லை.மேலும் பொங்கல் பண்டிகையன்று மதுரை,அலங்கநல்லூர்,பாலமேடு, அவனியாபுரம் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகின்றது.
இந்நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், 16 ஆம் தேதி பாலமேடு,17 ஆம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்தப்பட உள்ளது.மேலும் இந்த போட்டி நடைபெறும் இடங்களில் கொரோனா தடுப்பது நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ள வேண்டும்.அதனால் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் அனைவரும் www.madurai.inc.in என்ற இணையதளத்தில் அவரவர்களின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.மேலும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம்,வயது சான்றிதழ், கொரோனா தடுப்பூசி சான்றிதழ் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் ஜல்லிக்கட்டு,மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 நபர்களுக்கு அதிகம் இல்லாமல்.எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் மட்டுமே பங்குபெற வேண்டும்.மேலும் பார்வையாளர்கள் 150 பெரும் அனுமதிக்க வேண்டும்.மேலும் மாடுபிடி வீரர்கள் அவனியாபுரம்,பாலமேடு,அலங்காநல்லூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டும் பங்கேற்க முடியும்.ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மேற்பார்வையிடும் அதிகாரிகள்,பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.