தமிழகசட்டசபை தேர்தல் சம்மந்தமாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்! பரபரப்பில் அரசியல் கட்சிகள்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் சரியான நேரத்தில் சட்டசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்திருக்கின்றார்.

கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்தலும் நடத்தப்படமாட்டது என்று நினைத்திருந்த வேளையில், பீஹார் மாநில சட்டசபை தேர்தலை அறிவித்து அதனை நடத்தி முடித்தும் விட்டது தேர்தல் ஆணையம்.இந்த நிலையில், தமிழகசட்டசபைதேர்தலும் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிறுக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, கொரோனாவிற்கு இடையே பீஹார் தேர்தலை ஆரம்பித்தபோது பலர் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனாலும் அந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்து இருக்கின்றோம். தேர்தல் வழக்கமாக நடைபெறும் ஒரு நடைமுறைதான்.

இந்த விவகாரத்தில் நாங்கள் எப்போதுமே ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்க மாட்டோம் தமிழகம், மற்றும் மேற்கு வங்கம், போன்ற மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்த வருடம் சரியான நேரத்தில் நடைபெறும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.