பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக பதவி ஏற்றார் வானதி ஸ்ரீனிவாசன்! பதவியேற்பின் போது நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு!

0
57

பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவராக வானதி சீனிவாசன் இன்று காலை டெல்லியில் பொறுப்பேற்க இருக்கின்றார். இந்த நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என்று பாஜகவின் தலைமை தெரிவித்திருக்கின்றது.

கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூரில் 1970ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிறந்தவர் வானதி சீனிவாசன். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக் கொண்ட இவர் 1993ஆம் ஆண்டு முதல் அந்த கட்சியின் பல பொறுப்புகளை வகித்து வருகின்றார். வானதி சீனிவாசன் தேசிய செயற்குழுவில் உறுப்பினராக இருக்கின்றார்.

இப்போது பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர்களில் ஒருவராக பதவி வகித்து வரும் அவர் பாஜகவின் மகளிரணி அகில இந்திய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். தேசிய அளவில் இவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் வானதி ஸ்ரீனிவாசன். இந்த நிலையில், இவர் டெல்லியில் தேசிய மகளிர் அணி தலைவராக இன்றைய தினம் பொறுப்பு ஏற்றுக் கொள்கின்றார்.

வானதி ஸ்ரீனிவாசன் அவர்களை மகளிர் அணி தேசிய தலைவராக அந்தக் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா நியமித்திருக்கிறார். தமிழ் மக்களை தொடர்ச்சியாக அந்தக் கட்சி பெருமை படுத்தி வருகின்றது. இதற்கு முன்பு தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்து கவுரவித்தது.

அதேபோல அந்தக் கட்சி பலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. ஆனாலும் இது போன்ற பதவிகள் கொடுத்து அழகு பார்க்கும் அந்தக் காட்சியின் பின்னணியில் தமிழ்நாட்டில் விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள். பீகார் மாநிலத்திலும் இதே முறையை பின்பற்றியது என்றும் சொல்லுகிறார்கள் இப்போது அதே முறை இங்கும் பின்பற்றி ஏதேனும் அதிசயம் நிகழ்த்திட முடியுமா என்று முயற்சிக்கின்றது பாஜக என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.