மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ஜிப்மர் மருத்துவமனை செயல்படாது!

Photo of author

By Parthipan K

மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ஜிப்மர் மருத்துவமனை செயல்படாது!

Parthipan K

important-information-released-by-the-medical-administration-jipmar-hospital-will-not-function-today

மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ஜிப்மர் மருத்துவமனை செயல்படாது!

விஷ்ணுவின் தசாவதாரங்களில் ஒன்றான நரசிம்மா அவதாரம் எடுத்து ராணியை மன்னனை வதம் செய்து பிரகலாதனை காக்கும் கதையை நினைவூட்டும் விதமாக ஹோலி பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை வட இந்தியர்கள் கொண்டாடுகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு அரசு பல்வேறு துறைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

அந்த வகையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு இன்று  மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதனால் இந்த தேதியில் நோயாளிகள் ஜிப்பர் வெளிப்புற நோயாளிகள் பிரிவிற்கு வருகையை  தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் எந்த தடையும் இல்லாமலும்  விடுமுறை இல்லாமல் இயங்கும் என தெரிவித்துள்ளது. நாளை முதல் வெளிப்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் அறிவித்துள்ளது.