தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் மாதம்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் ஒருங்கிணைந்த சார்நிலைப்பணிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த தேர்வை எழுத 22 லட்சத்து 9 ஆயிரத்து 942 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி நடத்தப்பட்டது. விண்ணப்பித்தவர்களில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வானது இந்திய அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளில் அதிகளவு விண்ணப்பங்கள் பெறப்பட்ட தேர்வாக கூறப்படுகின்றது.தேர்வு முடிந்து ஆறு மாதங்களுக்கு மேல் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இந்த தேர்விற்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்துகொண்டிருந்தனர். இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் இந்த தேர்வில் எந்த ஒரு தவறும் ஏற்ப்படாது என்ற அடிப்படையில் தேர்வாணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இருபகுதிகளை கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையினால், விடைத்தாள்களின் இரு பகுதிகளை தனித்தனியே ஸ்கேன் செய்து அதில் உள்ள பிழைகளை கணினி மூலமாக கண்டுபிடிக்கப்படுகின்றது.
அதனை அவற்றை அலுவலர்கள் மூலம் நேரடி சரிபார்ப்பு மூலம் உறுதிசெய்யும் பணிகளுக்கு அதிகளவு அவகாசம் தேவை. மேலும் விடைத்தாள்களில் தேர்வாணைய அறிவுரைகளை மீறி தேர்வர்களால் செய்யப்படும் 16 விதமான பிழைகளை சரிபார்க்க வேண்டியுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சுமார் 10 முதல் 17 லட்சத்து 50 ஆயிரம் தேர்வர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது நடந்த தேர்வில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்களை பங்கேற்றுள்ளனர். மேலும் தற்போதைய முறைகளின்படி விடைத்தாள்களின் இரு பாகங்களையும் தனித்தனியே ஸ்கேன் செய்ய வேண்டும்.அப்போது 36 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள்களில் எண்ணிக்கை வருகின்றது.
கடந்த தேர்வுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு கூடுதலாக வேலையை உள்ளடக்கி உள்ளது. இதன் காரணமாக வரும் மார்ச் மாதம் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகும் என தெரிவித்துள்ளது.