இரு தினங்களாக தமிழகமெங்கும் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து தான் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யும் இணைய இருப்பதால் இதனை தவிர்த்தார். ஆனால் தலித் இணைத்தை சேர்ந்தவர்கள் இதனை சற்றுக்கூட எதிர்பார்க்கவில்லை.
அம்பேத்கரை பெருமளவில் போற்றுவரில் இவரும் ஒருவர், அவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியின் கூட்டணிக்காக அம்பேத்கரை உதாசினபடுத்தியதாக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. மேற்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் திருமவாவனின் மனம் முழுவதும் இங்கே தான் இருக்கும், ஆளுங்கட்சியின் பிரஷரால் தான் வரமுடியவில்லை என குற்றம் சாட்டினார்.
இவரை அடுத்து விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில் வேங்கை வயல் போன்ற குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் திமுக மெளனம் காத்து வருவதாக தெரிவித்தார். இவரின் இந்த பேச்சானது கூட்டணி கட்சிகளுக்கிடையில் பூதாகரமாக வெடித்தது. இதனால் திருமாவளவனுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஆரம்பித்தனர்.
இதன் உச்ச கட்டமாக ஆதவ் அர்ஜுனா கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால் சமீப காலமாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு இவர் மூலம் தான் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது என அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு தூக்குவது என்பது சாத்தியமில்லாத ஒன்று, அந்த வகையில் திருமா இதுகுறித்து கூறியதாவது, ஆதவ் அர்ஜுனாவின் கட்சி சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் கட்சிக்கு எதிர் மறையாகவே உள்ளது. இதுகுறித்து நிர்வாகிகள் அளித்த புகார் குறித்து கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்சியை விட்டு நீக்குவது என்பதும் தலித் சமூகத்தை அற்று இருப்பவர்களை காப்பது என்பது நமது கடமை என முட்டுகொடுக்கும் விதமாகவே பேசி வருகிறார். பண தேவைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு நீக்க திருமா யோசிக்கிறாரா என நெட்டிசன்கள் தங்கள் கருத்தை முன் வைக்கின்றனர்.