திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய தகவல்! இன்று ரூ 300 டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்து வந்தனர். மேலும் கோவில் போன்ற பொது இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பக்தர்கள் அதிக அளவு சாமி தரிசனம் செய்யும் கோவில்களில் ஒன்றாக இருப்பது திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில். இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த கொரோனா பரவலின் பொழுது நேரடி டிக்கெட் வினியோகம் நிறுத்தப்பட்டு ரூ.300 டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த டோக்கனின் மூலம் யார் எந்த நாளில் எந்த நேரத்தில் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும். அப்போது அவர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வரும் பொழுது கூட்ட நெரிசல் தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் திருப்பதியில் தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ 300 தரிசன டிக்கெட் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்பட்டு வருகின்றது.
அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் வெளியிடப்பட்டு ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்தும் நிறைவடைந்து விடுவதால் பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் தேவஸ்தானம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.