யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய தகவல்! இந்த தேர்விற்கும் டிகிரி இருந்தால் உடனே விண்ணபிக்கலாம்!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தபடுகிறது.குறிப்பாக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், குரூப் ஏ,குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகின்றது.இந்த தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள் யுபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.மேலும் இந்திய வனத்துறை பணி தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகின்றனர்.
இந்திய வனத்துறையில் உள்ள முக்கிய பதவிகளுக்கு இந்த தேர்வு மூலமாக தகுதி வாய்ந்த தேர்வு செய்யப்படுவார்கள்.இந்ததேர்வு சிவில் சர்வீஸ் தேர்வைப் போல முதல் நிலை தேர்வு,முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று மூன்று நிலைகளில் நடைபெறுகின்றது.
பனியின் பெயர்: இண்டியன் போரேச்ட் சர்வீஸ் எக்ஸாமினேஷன்.
காலிப்பணியிடங்கள்:150 ,இதற்கான கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.முதல் நிலை தேர்வு மற்றும் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படும்.
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ 100,விண்ணப்பிக்க கடைசி தேதி 21.03.2023 .மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்து கூடுதல் விவரங்கள் பெற www.upsc.in என்ற இணையதள பக்கத்தை சென்று பார்க்கலாம்.