தற்காலிக ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! ஊதியம் குறித்து தமிழக அரசின் உத்தரவு!!

Photo of author

By Rupa

தற்காலிக ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்!! ஊதியம் குறித்து தமிழக அரசின் உத்தரவு!!

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் பொழுது தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அந்த வகையில் 1990 ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 45 பள்ளிகளில் 45 முதுநிலை வணிகவியல் ஆசிரியர்கள் மற்றும் 45 முதுநிலை பொருளாதார ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர்.

அதனையடுத்து நான்காண்டு காலம் தற்காலிக அடிப்படையில் எந்த ஆசிரியர்களையும் நியமிக்கப்படவில்லை. 2011 -2012 ஆம் ஆண்டில் தான் 100 நகராட்சி மாநகராட்சி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டது. இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டதால் ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப 900 முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர்.

மீண்டும் இரண்டு ஆண்டுகள் தற்காலிக அடிப்படையில் யாருக்கும் பணி நியமனம் செய்யவில்லை. அதனையடுத்து 2014 -15 ஆம் ஆண்டில் மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது போல் நூறு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தினர். அவ்வாறு உயர்த்திய நிலையில் 900 ஆசிரியர்கள், தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்தனர்.

இவ்வாறு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தற்காலிக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வந்தனர். அந்த வகையில் 2018 மற்றும் 19ஆம் ஆண்டில் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 2,760 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணி ஆண்டானது முடிவடைந்து விட்டது. அவர்களுக்கு, இந்த ஆண்டு முடியும் வரை பணிநீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி கடந்த மாதத்திற்கான ஊதியத்தையும் வழங்குவதாக அரசு தெரிவித்துள்ளது.