அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது!

Photo of author

By Parthipan K

அரசு அலுவலகங்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இனி இந்த பொருளை பயன்படுத்தக் கூடாது!

உத்தரபிரதேசம் மாநில அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் அரசு அலுவலகங்களில் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை இனி பயன்படுத்த கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உத்தரப்பிரதேச அரசு இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது. அதனால்தான் அலுவலகங்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலகம் வெளியிட்ட வழிகாட்டுதல் நெறிமுறைகளில் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவது சரியில்லை என கூறியுள்ளது.

அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலகங்களிலும் நடத்தப்படும் கூட்டங்களில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டுக்கு தடை விதித்தேன் என அச்சிடப்பட வேண்டிய தேவை ஏற்பட்டால் காகிதத்தில் இரண்டு பக்கமும் அச்சிட்டு உபயோகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில்  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வனதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தடையை மீறினால் அபராதம். அதைத்தொடர்ந்து புலிகள் காப்பத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரங்களில் வனவிலங்குகளும் பசுமை மாறா காடுகளும் நிறைந்துள்ளது.

அதனை பாதுகாக்கும் வகையில் தற்போது மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது அதற்காகத்தான் தற்போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.