ATM -ல் பணம் எடுப்போர்களுக்கான முக்கிய செய்தி:! PIB -ன் எச்சரிக்கை!
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 90 சதவீத மக்கள் ஏடிஎம் கார்டை வைத்துள்ளனர்.பணம் தேவைப்படுவோர் வங்கிக்கு சென்று அலையாமல் ஏடிஎம் மூலம் பணத்தை எளிதில் எடுத்துக் கொள்கின்றன.
ஆனால் ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் சார்பில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
சில நாட்களாக இவ்வாறு ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் 173 ரூபாய் பிடிக்கப்படும் என்ற செய்தி சமூக வலைதளங்களில் மிக வைரலாகியுள்ளது.இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
Press Information Bureau சார்பில் இந்த செய்தியின் உண்மை தன்மையை ஆய்வு செய்தது.இந்த ஆய்வில் வங்கிகள் தரப்பில் 173 ரூபாய் வசூலிக்கப்படும் என்று கூறப்படவில்லை என்பது தெரிய வந்தது.இது முற்றிலும் பொய்யான செய்தியே என்று பிஐபி கூறியுள்ளது.மேலும் இது போன்ற தவறான செய்திகளை உண்மைத்தன்மை அறியாமல் பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் ஐந்து முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுப்பவர்களுக்கு 21 ரூபாய் மட்டுமே கட்டணம் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் ஏடிஎம் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென்று பிஐபி கூறியுள்ளது.