மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
186
Important notice for e-users! Tamil Nadu Electricity Board !!
Important notice for e-users! Tamil Nadu Electricity Board !!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு! இறுதியில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஒரே வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டதால் குறைவான எண்ணிக்கையில் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதால் இன்னும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்புகள் உள்ளன.

தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். இதனுடன் 21 இலட்சம் விவசாய இணைப்புகள், விசைத்தறி, கைத்தறி இணைப்புகள் உள்ள நிலையில் அனைத்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழக மின்சார வாரியம் கேட்டு கொண்டது. இதற்கு ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டதால் 1.39 கோடி பேர் மட்டுமே மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இது இரண்டு வகைகளில் இணைக்கப்படலாம். ஒன்று தமிழ் நாடு மின்சார வாரியத்தின் இணையதளம் அல்லது 2811 அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலோ சென்று இணைத்து கொள்ளலாம்.இதன்படி சனிக்கிழமை அன்று நடந்த சிறப்பு முகாமில் 1.43 இலட்சம் பேரும், மின் வாரிய இணைய தளம் வழியாக 1.16 இலட்சம் பேரும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இதன் மூலம் மொத்த இணைப்புகள் 1.39 கோடி என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மின் வாரிய இணைப்புடன் ஆதார் எண்ணை டிசம்பர்-31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் இன்னும் 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளர்கள் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.எனவே இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட் வாய்ப்புகள் உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் தமிழ் நாடு மின்சார வாரியம் மூலம் அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

Previous articleவெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! ஜனவரி 1 முதல் இதனின் கட்டணம் உயர்வு !!
Next articleதிருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இந்த விதிமுறைகள் கட்டாயம்!