TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வு சான்றிதழ் பதிவேற்றத்திற்கு தேர்வு பெற்றவர்கள் ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்ய இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் 9.11.2024 முதல் 21.1102024 வரை சான்றிதழ் பதிவேற்றம் செய்யலாம் என அறிவித்திருந்தது.
குரூப் 4 தேர்வின் மூலம் அரசு வேலை பெற வேண்டும் என நினைப்பவர்கள் கனவு நிறைவேறுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு தேர்வில் பலர் தேர்வு செய்யப்பட்டு ஒரு சிறந்த இடத்தில் வேலை செய்து வருகின்றனர். அந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு நவம்பர்-7 ஆம் தேதி தேர்வாணையம் பட்டியலை வெளியிட்டது.
அதில் உங்களுடைய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய 9.11.2024 முதல் 21.11.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நாட்கள் தற்போது முடிய இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. எனவே தேர்வர்கள் விரைவில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. ஏனெனில் கடைசி நேரத்தில் “வெப்சைட் சர்வர்” குறைவாக இருந்தால் பல பிரச்சனைகள் நேரிடும். எனவே முன்னதாகவே சான்றிதழ்களை சரிபார்க்க சமர்ப்பிக்க வேண்டும் என விளக்கப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய போதுமான தகவல் பெற வேண்டும் என்றால் தேர்வாணையத்தின் உதவி அழைப்பு எண்களை பயன்படுத்தி தங்களது சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். மேலும் இந்த பணியிடங்களுக்கான சேர்க்கை அதிகரித்து உள்ளது என அரசு அறிவித்திருந்தது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் அக்டோபர் 28-ஆம் தேதி வெளியானது.