வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!!

0
113

வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. நள்ளிரவு முதல் தமிழக்தில் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயருகிறது!!

நாடு முழுவதும் 816 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது.ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்ட சுங்கசாவடிகளும்,செப்டம்பர் மாதத்தில் மீதம் உள்ள சுங்கச்சாவடிகளும் சுங்க வரி கட்டணத்தை உயர்த்திக் கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான சுங்க கட்டணம் செப்டம்பர் 1 நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் மட்டும் 54க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது.இவற்றில் 29 சுங்கச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.5 முதல் 55 வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு மீதம் இருக்கும் 25க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வர இருக்கிறது.

அதன்படி கார்,ஜீப்,வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒருமுறை சென்று வர ரூ.85 வசூலிக்கப்பட்ட நிலையில் அவை 5 ரூபாய் உயர்ந்து இனி ரூ.90 ஆக வசூலிக்கப்படும். இருமுறை கட்டணம் ரூ.125 ஆக இருந்த நிலையில் இனி அவை ரூ.135 ஆக வசூலிக்கப்படும்.மாதாந்திர கட்டணம் ரூ.2505 என்பது ரூ.2740 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இலகு ரக வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் ரூ.145 ஆக வசூலிக்கப்பட்ட அவை ரூ.160 ஆக உயர்ந்துள்ளது.இருமுறை சென்று வர ரூ.220ல் இருந்து ரூ.240 ஆகவும்,மாதாந்திர கட்டணம் ரூ.4385 என்பது ரூ.4800 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் லாரி,பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்று வர ரூ.290 வசூலிக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணம் தற்பொழுது ரூ.320 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருமுறை சென்று வர ரூ.440ல் இருந்து ரூ.480 ஆக அதிகரித்துள்ளது.மாதாந்திர கட்டணம் ரூ.8770 ஆக இருந்த நிலையில் இனி ரூ.9595 ஆக வசூலிக்கப்பட்ட இருக்கிறது.

இதேபோல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்கள் ஒருமுறை சென்று வர ரூ.470 வசூலிக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணம் தற்பொழுது ரூ.515 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இருமுறை சென்று வர ரூ.705ல் இருந்து ரூ.770 என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.14,095 ஆக இருந்த நிலையில் தற்பொழுது ரூ.15,420 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Previous articleஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு!! இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை!!
Next articleடிப்ளமோ முடித்தவர்களுக்கு பிஜிசிஐஎல் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை காத்திருக்கிறது! வாக்-இன் செல்ல ரெடியா?