பெற்றோர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ஜனவரி முதல் SSY திட்டத்தில் வரப்போகிறது புதிய மாற்றம்!!

0
108
Important notice for parents!! New change coming in SSY scheme from January!!
Important notice for parents!! New change coming in SSY scheme from January!!
பெண் குழந்தைகளுக்கு என்று மத்திய அரசு செலயல்படுத்தி வரும் செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கு(சுகன்யா சம்ரித்தி யோஜனா) நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் லட்சக்கணக்கான பெற்றோர் தங்கள் குழந்தைகள் பெயரில் கணக்கு முதலீடு செய்து வருகின்றனர்.தற்பொழுது இத்திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களிலேயே அதிகபட்ச வட்டி தரும் திட்டம் இதுவாகும்.
இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் உயர் கல்வி,திருமணம் போன்ற தேவைகளுக்காக தொடங்கப்பட்டவையாகும்.இதன் முக்கிய சிறப்பே குறைந்த முதலீடு அதிக வட்டி என்பது தான்.
10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியுடன் கணக்கு தொடங்க முடியும். குழந்தைகள் 10 வயதை கடந்த பிறகு இத்திட்டத்தை அவர்களது பெயருக்கு மாற்றிவிடலாம்.
இத்திட்டத்தில் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும்.21 ஆண்டுகளுக்கு பிறகு முதலீடு தொகை மற்றும் அதற்கான வட்டி கிடைக்கும்.இத்திட்டத்தில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு செய்யலாம். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.
ஒவ்வொரு காலாண்டிலும் இத்திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் மாற்றப்படும்.ஆனால் இந்த காலாண்டில் வட்டி விகிதம் மாற்றப்படாமல் 8.2% மாகவே தொடர்கிறது. இந்நிலையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் குறித்த புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டத்திற்கான வரி உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
Previous articleஜோதிட சாஸ்திரப்படி இந்த 3 ராசி ஆண்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்!!
Next articleகோயம்பத்தூரில் மாதம் ரூ.28,000/- ஊதியத்தில் அரசு வேலை!! OCTOBER 30க்குள் விண்ணப்பியுங்கள்!!