ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு!! இதை கட்டாயம் இணைந்திருக்க வேண்டும்!!

Photo of author

By Jeevitha

ரேஷன் அட்டை மூலம் மக்களுக்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் பொங்கலுக்கு சிறப்பு தொகுப்பு, மகளிர் உரிமை தொகை போன்ற சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும் என்றால் முக்கியமாக ரேஷன் அட்டை பெற வேண்டும் என்பது ஆகும். இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு அப்டேட் செய்வதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் அப்டேட் செய்துக்கொல்லாம்.

இதற்கான கால அவகாசம் டிசம்பர் 1 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அருகில் உள்ள இ-சேவை மையங்களில் ரேஷன் கார்டுகளில் இ-கேஒய்சி அப்டேட் செய்து கொள்ளலாம். கட்டாயம் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் கேஒய்சி இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள முறையை போலவே ரேஷன் கார்டுகளில் இ-கேஒய்சி சரிபார்க்கும் நடவடிக்கையை எடுக்க குடிமை பொருள் வழங்கல் துறை இந்த பணியை மேற்கொள்ளும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான காரணம் சில ஆண்டுகளாக ரேஷன் கடை செயல்படாததால் கைரேகை பதிவு, ஆதார் எண் சரி பார்ப்பதற்கு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும் இந்த இகேஒய்சி சரிபார்ப்பு ஆரம்ப நிலையில் உள்ளது. மேலும் இந்த பணியை சரிபார்க்க ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன்-ல் விரைவில் அதிகாரிகள் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் அரசின் நலத்திட்டங்களை பெற ரேஷன் கார்டுகள் முக்கியமாக தேவைப்படுவது பல முறைகேடுகள் நடக்கிறது. அதனால் இது போன்ற முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.