திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்!

0
196
#image_title

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு- இன்றே முன்பதிவு செய்யவும்!

வரும் மார்ச் மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை கட்டண சேவைகள் மூலம் தரிசிப்பதற்கான டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கட்டண சேவைகள் மூலம் மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு தேவையான டிக்கெட்டுகள் இன்று மாலை 4 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையத்தில் வெளியாக உள்ளது.

மேலும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்களில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளுக்காக குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட்டுகளை தேவஸ்தானத்தின் www. tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்

author avatar
Parthipan K