ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த IRCTC!!

0
118
Important notice for train passengers! IRCTC warns against fake ads!!
Important notice for train passengers! IRCTC warns against fake ads!!

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! போலி விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த IRCTC!!

நமது நாட்டின் மிக முக்கிய பொது போக்குவரத்தாக இருப்பது ரயில்கள் தான்.நாட்டின் இருக்கின்ற பிற முக்கிய நகரங்களுக்கு பல்வேறு வசதிகளுடன் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரயில் போக்குவரத்து சிறந்த சாய்ஸாக இருக்கிறது.

நாட்டில் பல போக்குவரத்து சேவைகள் இருந்தாலும் ரயில் பயணத்தை போன்ற சௌகரியம் வேறு எதிலும் கிடைக்காது என்று சொல்லலாம்.ஆனால் ரயிலில் பயணம் செய்ய வேண்டுமென்றால் சில வாரங்களுக்கு முன்னரே அதற்கான பயணசீட்டை ஆன்லைனில் புக் செய்திருக்க வேண்டும்.இதனால் பண்டிகை காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது பயணிகளுக்கு கடும் சவாலான ஒன்றாக இருக்கின்றது.

இந்தியாவில் தினசரி ரயில் பயணத்திற்கு சுமார் 21 லட்சம் பேர் முன்பதிவு செய்கின்றனர்.ஆனால் முன்பதிவு செய்யும் பல யூசர்கள் போலியான ஆன்லைன் டிக்கெட் மோசடிகளால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் IRCTC ஆனது பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான போலி விளம்பரம் குறித்த எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.IRCTC பெயரில் போலி விளம்பரங்கள் செய்து பயனர்களின் விவரங்களை திருடுதல்,பண மோசடி போன்ற குற்றச் செயல்கள் தொடர்ந்து
அதிகரித்து வருகிறது என்று IRCTC எச்சரித்துள்ளது.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள்,வங்கி தகவல்களைக் கொடுக்க சொல்லி போலியான IRCTC இணையதள லிங்க் வந்தால் அதற்கு ரெஸ்பான்ஸ் செய்ய வேண்டாம் என்று IRCTC தெரிவித்திருக்கிறது.

யூசர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள்:

யூசர்கள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்ய IRCTC இணையதளம் வாயிலாக தொடர்பு வேண்டும்.

அதேபோல் [email protected] மின்னஞ்சல் அல்லது 14646 என்ற அதிகாரபூர்வ எண்ணை தொடர்பு கொண்டு தங்களது டிக்கெட்டை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.