ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள்,திருச்சி அண்ணாநகர் கூட்டுறவு வங்கியில் உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கினார்.பின்பு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதவாறு!
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.4SP 12DSP மற்றும் 24காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு இதனை கண்காணித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.மேலும் கடைசி மூன்று மாதங்களாக 13 லட்சம் ரேசன் அட்டைதாரர்கள் எந்த ரேஷன் பொருட்களும் வாங்கவில்லை என்றும், இதனால் நியாயவிலை பொருட்களில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும் ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள் மற்றும் தேவையில்லை என்பவர்களுக்கு கௌரவ அட்டை என்ற முறையுள்ளது.ரேஷன் பொருட்கள் தேவை இல்லை என்பவர்கள் இந்த கௌரவ அட்டையை பெற்றுக்கொள்ளலாமென்று அவர் கூறினார்.மேலும் இந்த கௌரவ அட்டை முறை பற்றி பெரிதாக விழிப்புணர்வு இல்லாதநிலையில்,சுமார் 60000 பேர் இந்த கௌரவ அட்டையை தமிழகத்தில் வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் நியாயவிலை கடை பணியாளர்கள்,சோப்பு போன்ற எக்ஸ்ட்ரா பொருட்களை வாங்க மக்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும்,மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாகிருஷ்ணன்
தெரிவித்துள்ளார்.