மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!! விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ரூ.1000 கன்பார்ம்!

Photo of author

By Divya

மகளிர் உரிமை தொகை குறித்த முக்கிய அறிவிப்பு!! விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ரூ.1000 கன்பார்ம்!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று தொடங்கி வைத்தார்.தங்கள் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமை தொகையால் குடும்ப தலைவிகள் தங்கள் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.சிலர் தங்கள் சுயத் தொழிலுக்கு இந்த பணத்தை பயன்படுத்தி வருகின்றனர்.பெண்களின் வாழ்க்கை தரம் உயர மகளிர் உரிமை தொகை மிகவும் பயனுள்ள ஒன்றாக உள்ளது.இந்த திட்டத்தில் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெற்று வரும் நிலையில் திட்டத்தை விரிவு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.

இந்த மகளிர் உரிமை திட்ட விரிவாக்கத்தில் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவி,புதிதாக திருமணம் ஆன பெண்கள்,புதிய ரேசன் அட்டை பெற்றவர்கள் இணைக்கப்பட உள்ளனர்.இந்த திட்ட விரிவாக்கம் மூலம் சுமார் 1,40,000 பேருக்கு மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கப்பட உள்ளது.

எனவே மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பத்து நிராகரிக்கப்பட்டவர்கள்,புதிய ரேசன் கார்டு பெற்றவர்கள்,புதிதாக திருமணமானவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்ய உள்ள புதிய பயனாளிகள் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.சிறப்பு கேம்ப்,இ சேவை முகாம்களை அமைத்து விண்ணப்பங்களை பெற அரசு முடிவு செய்திருக்கிறது.கிட்டத்தட்ட 1,80,000 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படும் நிலையில் விண்ணப்பிப்பவர்களில் 90% பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.எனவே இந்த வாய்ப்பை தவறவிடாமல் குடும்ப தலைவிகள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்:-

1)ரேசன் கார்டு
2)புதிதாக திருமணம் செய்யப்பட்டவர்கள் திருமண சான்று இணைக்க வேண்டும்
3)குடும்ப தலைவியின் வங்கி கணக்கு
4)வங்கி கணக்குடன் ஆதார் + மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்