சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
220

சேலம் மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!! ரேஷன் அட்டைதாரர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

சேலத்தில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை அன்று அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோக குறை தீர்ப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதோடு புகார் மனுக்களையும் அளிக்கலாம்.

அந்த வகையில் பொதுமக்கள் இந்த முகாமில் குடும்ப அட்டைகளின் தங்களது பெயர்களை சேர்த்தல் பெயர் நீக்கம் செய்தல் அல்லது புதிய அட்டை கோரி விண்ணப்பித்தல் என அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

அதுமட்டுமின்றி செயல்பட்டு வரும் பொது கடைகளில் ஏதேனும் பொருட்களின் தரம் குறித்து புகார் தெரிவிக்க வேண்டும் என்றாலும் இந்த குறைத்தீர் முகாமில் கூறலாம். இவ்வாறு பொதுமக்கள் தெரிவிக்கப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு அளிக்கப்படும்.

இந்த அத்தியாவசிய பொருட்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் அனைத்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இம்மாதம் இரண்டாவது சனிக்கிழமை ஆன வரும் 8 ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் குறை தீர்ப்பு முகாம் நடைபெறும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

மக்கள் இதனை பயன்படுத்தி ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் நீக்கம் செய்தல் மேலும் புதுப்பித்தல் என அனைத்து விதமான தங்களது தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Previous article9- வது முறையாக பட்டம் வென்ற இந்திய அணி!! குவைத்தை வென்று வெற்றி வாகை சூடியது!! 
Next articleஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவர்! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஜித் அக்ரகார் தேர்வு!!