பான் கார்டு வைத்துள்ளவர்களா? இது கண்டறியப்பட்டால் 10 ஆயிரம் அபராதம்
பான் கார்டு என்பது நம்முடைய நிரந்தர கணக்கு எண் ஆகும். நமது வங்கி கணக்கு எண்கள், வருமான கணக்கு எண் ஆகியவை இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. பான் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். இது வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது.
வரி செலுத்தும் நபரின் அனைத்து பரிவர்த்தனைகளையும் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க பான் கார்டு தேவைப்படுகிறது. அதே போல் ஒருவரின் முதலீடுகள், தொழில், கடன் ஆகியவற்றை வருமான வரி கணக்குடன் ஒப்பிடுவதற்கு பான் கார்டு பயன்படுகிறது.
ஆதார் அட்டை அல்லது வாக்களர் அடையாள அட்டை தவிர பான் கார்டையும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம்.தற்போது பண பரிவர்த்தனைக்கு பான் கார்டு அவசியமாகிறது. இதன் மூலம் அதிக பண பரிவர்த்தனைகளை எளிதாக கண்காணிக்கலாம். அதே போல ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பான் கார்டுகள் பயன்படுத்தினால் என்ன தண்டனை என்கிற விவரம் வெளியாகியுள்ளது. வருமான வரித்துறையின் விதிமுறைகளின் படி தனி நபர்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு நபர் ஒன்றிக்கும் மேற்ப்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது கண்டறிப்பட்டால், வருமான வரி சட்டம் 1961 இன் பிரிவு 272B ன் கீழ் அவருக்கு 10000 ருபாய் அபராதம் விதிக்கப்படலாம்.
அகவே தனிநபர்கள் தங்களிடம் ஒரு பான் கார்டு உள்ளதை உறுதி செய்து கொள்ளவேண்டும். ஒன்றிக்கு மேற்ப்பட்ட கார்டுகள் இருப்பின் அதை உடனே அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.