துர்கா ஸ்டாலினின் சகோதரருக்கு மருத்துவ துறையில் முக்கிய பதவி! தமிழக அரசு அறிவிப்பு 

0
298
Important post in the medical field for Durga Stalin's brother! Tamil Nadu Government Notification
Important post in the medical field for Durga Stalin's brother! Tamil Nadu Government Notification

துர்கா ஸ்டாலினின் சகோதரருக்கு மருத்துவ துறையில் முக்கிய பதவி! தமிழக அரசு அறிவிப்பு

தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ஜெ.ராஜமூர்த்திக்கு மருத்துவ துறையில் முக்கிய பொறுப்பான டி.எம்.எஸ் இயக்குனராக பதவி வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி தமிழக இ.எஸ்.ஐ மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வானது வழங்கப்பட்டது.அந்த அடிப்படையில் அவருக்கு தற்போது மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆளுநர் ஒப்புதலுடன் வெளியிட்டுள்ளார். இதற்கு முன் இந்த பொறுப்பிலிருந்த மருத்துவர் ஆர்.இளங்கோ மகேஸ்வரன் இவர் வகித்து வந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள இவர் மாநிலம் முழுவதுமுள்ள மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான மருத்துவமனைகளை கட்டுப்படுத்தி நிர்வகிப்பார் என்று கூறப்படுகிறது.

Previous articleமக்களே மிஸ் பண்ணிடாதீங்க.. இதை செய்தால் ரூ.1,41,000 கிடைக்கும்!! உடனே விண்ணப்பியுங்கள்!!
Next articleவன்னியர் இட ஒதுக்கீடு மறுப்பு: திமுகவின் சமூக அநீதி கோரமுகம் அம்பலமாகிவிட்டது! மருத்துவர் ராமதாஸ் விமர்சனம்