வாட்ஸ் ஆப் – பயன்படுத்தும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய மிக முக்கிய விஷயங்கள்!

0
134

உலக அளவில் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிக்கேஷன் வாட்ஸ் ஆப் ஆகும். மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உடனடியாகவும் மெசேஜ், வீடியோ, ஆடியோ ,போட்டோ, போன்றவற்றை அனுப்ப பயன்படுகிறது. பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்-ஆப் செயலியின் பயன்பாடு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிடுகிறது.

வாட்ஸ்-ஆப்பில் இருக்கும் ஒரு சில வசதிகள் அனைவருக்கும் தெரிவதில்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வசதிகளை பார்ப்போம்.

மற்றவர்களின் ஸ்டேட்டஸ் எப்படி டவுன்லோட் செய்வது. WhatsApp – settings- show hidden – status download மூலம் மற்றவர்களின் ஸ்டேட்டஸை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

உங்கள் மெமரியை அதிகமாக பயன்படுத்துவது யார்? 
வாட்ஸ்-ஆப்பில் அனுப்பப்படும் போட்டோ மற்றும் வீடியோக்களால் மொபைலில் தானாகவே டவுன்லோட் ஆகும் இதனால் மெமரி குறையும். இதில் எந்த ஒரு நபரால் அதிகமான மெமரி வீணாகிறது என்பதனை கண்டறிய Settings – Open Data and storage usage – Storage usage மூலம் தெரிந்துகொள்ளலாம்.

வாட்ஸ்-ஆப்பில் அனுப்பப்படும் மீடியா பைல்களை தானாகவே பதிவிறக்கம் செய்தால் மொபைல் டேட்டா விரைவில் தீர்ந்துவிடும். இதனை கட்டுப்படுத்த Settings – Data and storage usage – Media auto-download – when using mobile data பிரிவில் No media ஆப்சனை தேர்வு செய்து கொண்டால் தானாகவே எந்த மீடியாவும் பதிவிறக்கம் ஆகாது. நமக்கு தேவையானதை மட்டும் நாம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் டேட்டா வீணாகாது.

ஹெட்செட் இல்லாத சமயங்களில் வாய்ஸ் மெசேஜை படிக்க பலரும் பயப்படுவர். காரணம் அது சத்தமான ஸ்பீக்கரில் ப்ளே ஆவதால் தான். ஆனால் வாட்ஸ்-ஆப்பில் இதற்கென்றே ஒரு தனி வசதி உள்ளது. அதாவது வாய்ஸ் மெசேஜின் ப்ளே பட்டனை க்ளிக் செய்தவுடன் மொபைலை எப்போதும் கால் பேசுவது போல காதின் அருகில் வைத்துக்கொண்டால் தானாகவே சத்தம் குறைந்துவிடும்.

வாட்ஸ்-ஆப்பில் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் போல்ட், இட்டாலிக், அடிக்கப்பட்ட எழுத்து ஆகியவற்றை அனுப்பலாம். 
text – பொல்ட்
text – இட்டாலிக்
text – strike

WhatsApp இல்லை என்றால் மனிதன் தனிமையில் இருப்பதாக உணரும் நிலையில் மனிதன் உள்ளான். இன்றை அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் WhatsApp உள்ளது என்பதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை என்பது உண்மை.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

Previous articleதிமுக ஸ்டாலின் ரகசிய பொதுக்கூட்டம்! மண்டபம் சீல் வைத்ததன் நோக்கம்! கலவரத்தை தூண்டவா? அமைச்சர் பேச்சு!
Next articleகாபி டே உரிமையாளர் சித்தார்த்தா கொலையா? போலீஸ் கமிஷனர் திடுக்கிடும் தகவல்?