Tamil Nadu Department of School Education: 10 11 12 ஆம் வகுப்பு தனி தேர்வாளர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பெஞ்சால் புயலால் கடந்த 4 தினங்களாக விடாது அடை மழையாகவே தமிழகம் முழுவதும் காணப்பட்டது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கி 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. அந்த வகையில் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என தெரிவித்துள்ளனர்.
மேற்கொண்டு இதன் விடுமுறையானது டிசம்பர் 24 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 1 எனக் கூறியுள்ளனர். இதற்கு அடுத்ததாக பொது தேர்வு குறித்து அறிவிப்புகள் கடந்த மாதமே பள்ளிக் கல்வித்துறையானது வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித் தேர்வாளர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவது குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வு எழுத நினைக்கும் நபர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
இதன் இறுதி தேதியாக 17ஆம் தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு சேவை மையங்களில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். மேற்கொண்டு விவரம் அறிய dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளும் படி கூறியுள்ளனர்.