பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான் கான், காஷ்மீரின் முழுப் பகுதியையும் இணைத்து புதிய வரைபடத்தை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபின், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் முடியும் தருவாயில், பாகிஸ்தான் இந்த வரைபடத்தை வெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சியில் வெளியான புதிய வரைபடத்தில் (மேப்), ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கிறது. மேலும் அந்த ஜம்மு காஷ்மீர் பகுதியினை, “இந்தியா சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்துள்ளது” என்று அந்த செய்தியில் வெளியானது.

இதன் பிறகு பாகிஸ்தான் செய்தி ஊடகங்களில் தோன்றிய இம்ரான் கான், “இந்த வரைபடம் ஆனது பாகிஸ்தான் மக்களின் பிரதிபலிப்பாகவும், காஷ்மீர் மக்களின் கொள்கைகளை தான் ஆதரிப்பதாகவும், இந்தியாவின் ஆதிக்கத்தை அங்கு செலுத்துவதை நிறுத்த வேண்டுமெனவும், கடந்த வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்கியது சட்டவிரோதமானது” என்றும் . கூறினார்.
மேலும், ‘அமைச்சரவையிலும், எதிர்க்கட்சி அமைப்புகளும், காஷ்மீரின் தலைவர்கள் ஒப்புதலோடும் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது எனவும், இனிமேல் இதுதான் பாகிஸ்தானில் பயன்படுத்தப்படும்’ என்றும் அந்த செய்தியில் தெரிவித்தார்.
காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே விரும்பியதாகவும், தற்போது மாற்றப்பட்ட வரைபடத்தின் மூலம் தான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அதிகாரி எனக் கூறும் ஹசன் அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வெளியிட்டுள்ள இந்த வரைபடம் ஏஜேகே, ஜிபி, ஜூனாகத், சர் க்ரீக், என்ஜே9842, சியாச்சின், பாகிஸ்தானின் ஒரு பகுதி. ஆக்கிரமிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதி. இதனை ஐநா மூலம் தீர்வு காண்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/hasabs1214/status/1290646971418660868?s=20
இது குறித்து மேலும், கரீத் ஃபகூரிம் என்பவர், இதுதான் பாகிஸ்தானின் புதிய வரைபடம். ஆனால் காஷ்மீரானது (இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்) கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் வரைபடத்தில் தானே உள்ளது, புதிதாக பேரை மட்டும் குறிப்பிடுவதால் என்ன நிகழப்போகிறது? யார் இந்த யோசனையை கூறியது? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/GFarooqi/status/1290643125627695107?s=20
இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, பாகிஸ்தானின் ஆதரவினால் செயல்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பிராந்தியத்திலுள்ள எல்லை விரிவாக்கத்தின் வேட்கை தான்.
இது ஒரு அரசியல் அபத்தம் ஆகும். ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிகளுக்கு உரிமை கோருவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாது. மேலும் இதற்கு சட்ட அங்கீகாரமோ அல்லது சர்வதேசத்தின் நம்பிக்கைத் தன்மையும் கிடைக்காது என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா குறிப்பிட்டுள்ளார்.