இம்ரான்கான் செய்த மிகப்பெரிய தவறு: பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

0
127

இம்ரான்கான் செய்த மிகப்பெரிய தவறு: பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் செய்தது மிகப்பெரிய தவறு என பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்த விவகாரத்தில் கடும் கோபமடைந்த பாகிஸ்தான், இந்தியா உடனான வர்த்தக ரீதியான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.

இதனால் இந்தியாவில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் பாகிஸ்தானுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாகிஸ்தானில் பழங்கள் காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டது. குறிப்பாக தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு 300 ரூபாய் விற்பனை ஆனதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்

இந்த நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு விவகாரங்கள் துறை அமைச்சர் ஹமத் அசார் அவர்கள் கூறியபோது ’இந்தியாவுடனான வர்த்தக தொடர்பை துண்டித்து மிகப்பெரிய தவறு என்றும் இந்த விஷயத்தில் பிரதமர் இம்ரான்கான் தவறு செய்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இருப்பினும் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் காய்கறி மற்றும் பழங்களின் விலை கட்டுக்குள் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

Previous articleபுளுசட்டை மாறனின் ’ஆன்ட்டி இந்தியன்’: கொதித்து எழுவார்களா பாஜகவினர்?
Next articleஜெயலலிதா நினைவு தினத்தில் பிரபல நடிகை செய்த மரியாதை: டுவிட்டரில் வைரல்