PMK: பாமகவின் அப்பா மற்றும் மகனுக்கிடையே உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டமானது தைலாபுரத்தில் நடக்க உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாகவே நடந்து முடிந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்த்தி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பேரன் முகுந்தனுக்கு நாற்காலியும் ஒதுக்கப்படவில்லை.
இதற்கெல்லாம் காரணம் புரியாமல் நிர்வாகிகள் உள்ளனர். இவையனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இருக்குமென அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். குறிப்பாக வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது எந்த பக்கம் நமக்கு பலம் அதிகம் என்பது குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளாராம்.
ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற விருப்பத்திற்கு நிர்வாகிகள் எந்த அளவிற்கு ஆதரவு உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ள இருக்கிறாராம். அதேபோல இந்த கூட்டத்தில் உட்க்கட்சிக்குள் நடக்கும் மோதலை முடிக்கும் படியான முடிவுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.