விஜயகாந்த் ரூட்டை பிடிக்கும் விஜய்!! 2026 ல் அதிமுக கூட்டணி உறுதி!!

Photo of author

By Sakthi

politics:2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.

நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முழுமையாக விலகி தமிழ வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அதன் பிறகு முதல் மாநில மாநாடு , மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் போன்ற கட்சி தொடர்பான அரசியல் செயல்பாடுகளை நடத்தி வருகிறார். திமுகவை அரசியல் எதிரியாக அறிவித்தார் விஜய்.

எனவே திமுக ,பாஜக வை கடுமையாக விமர்சித்து வருகிறார் விஜய். தவெக கட்சியின் கொள்கைக்கு சீமான் ,திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் விஜய் அதிமுக கட்சி பற்றி எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இது வரும் காலங்களில் தவெக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் என்ற சூழல் நிலவிவருகிறது.

மேலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் போல  விஜய் விருதாச்சலத்தில்  தேர்தல் போட்டியில் களம் இறங்குவார் என தகவல் வெளியாகி வருகிறது. மேலும் புதியதாக கட்சி தொடங்கியதால் தவெக 2026 ல் தனித்து போட்டியிடும் என தகவல் வெளியாகி வருகிறது. விஜய் தனித்து போட்டியிட்டால் வட தமிகத்தில் உள்ள வன்னியர்கள் மற்றும் தலீத் சமுதாய வாக்குகளை பெறுவார் என கூறப்படுகிறது.

இது பமக மற்றும் விசிக வாக்கு வங்கிகளை பாதிக்கும். இவ்வாறாக அதிமுக ,தவெக கூட்டணி வைத்தால் திமுகவிற்கு சவாலாக இருக்கும் ஆனால் விஜய் நினைத்த அளவுக்கு வாக்குகளை பெற முடியுமா! என்பது தான் கேள்விக்குறியாக? உள்ளது.