வீட்டின் தரை பகுதிக்கு அடியில் இருந்த 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த நபரை மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள கில்ஃபோர்டு நகரில் உள்ள ஒரு வீட்டில் கிரிஸ்டோபர் என்பவர் புதிதாக குடி பெயர்ந்துள்ளார்.இவர் அந்த வீட்டில் பொருள்களை அடுக்கி வைக்கும்போது அங்கு தரை தளத்தில் விரிசல் உள்ளதை பார்த்து அதன் அருகில் சென்றபோது விரிசல் பெரிதாகி கிழே விழுந்துள்ளார்.இதனை பார்த்த கிறிஸ்டோபர் மனைவி அதிர்ச்சியில் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து அங்கு வந்த மீட்பு குழுவினர் கிறிஸ்டோபரிடம் அங்குள்ள நிலை குறித்து விசாரித்த போது,அங்கு தண்ணீர் இருப்பதாக மேலும் அது பார்ப்பதற்கு கிணறு போன்று இருப்பதாக மீட்பு குழுவினரிடம் கூறியுள்ளார்.இதனை அடுத்து மீட்பு குழுவினர் அவருக்கு லைஃப் ஜாக்கெட் கொடுத்துள்ளனர்.பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிரிஸ்டோபர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த சம்பவத்தை கில்ஃபோர்டு போலீசார் அவர்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர்.
மேலும் அந்த வீட்டில் கிணறு ஒன்று இருந்தது யாருக்கும் தெரியவில்லை.1843 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டில் ஆரம்ப காலத்தில் அந்த கிணறு வீட்டிற்கு வெளியில் இருந்தது.வீட்டை பெரிதுபடுத்திக் கட்டும் போது அந்த கிணற்றை முறையாக மூடாமல் வெறும் மரப்பலகைகளை வைத்து தரைத்தளம் அமைத்துள்ளனர் என்று போலீசார் கூறியுள்ளனர்.
தற்பொழுது கிரிஸ்டோபர் உடல் நிலை நன்றாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.